கெங்கவல்லி, மார்ச் 26-
நூறு நாள் வேலை திட்டத்தில் முறையாக வேலை வழங்கிடக்கோரி அனைத்திந்திய ஜனயாயக மாதர் சங்கம் சார்பில் கெங்கவல்லி ஒன்றிய அலுவலகம் முன்பு திங்களன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதிலும் நூறு நாள் வேலை திட்டத்தில் முறையாக வேலை வழங்கிட வேண்டும். நாமக்கல் மாவட்டம் கெங்கவல்லி, தெடாவூர், வீரகனூர் செந்தாராப்பட்டி, தம்பம்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளிலும் வேலை வழங்கிட வேண்டும். தம்பம்பட்டி வட்டாட்சியர் காலிப்பணியிடத்தை நிரப்பிட வேண்டும். முதியோர், விதவை, விவசாய கூலிதொழிலாளர்களுக்கு நிறுத்தப்பட்ட உதவித்தொகையினை தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்ட தலைவர் புஷ்பா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பரமேஷ்வரி, துணை செயலாளர் கே.பெருமாள், வட்ட செயலாளர் ஜானகி உள்ளிட்ட எண்ணற்றோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: