சேலம், மார்ச் 26-
சாலைகளை சீரமைக்க பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் முன்னிலையிலேயே வாலிபர் ஒருவர் திடீரென தனது கைகளை பிளேடால் அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாநகராட்சி 47 ஆவது வார்டில் வசிப்பவர் பார்த்திபன். இவர் தனது வார்டில் உள்ள அம்பேத்கர் நகர், முல்லுவாடி தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்கக்கோரி திங்களன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். இதன்பின் ஆட்சியர் ரோஹிணியை சந்தித்து மனுவினை வழங்கினார். அப்போது, மறைத்து வைத்திருந்த பிளேடால் திடீரென பார்த்திபன் தனது கைகளை கிழித்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார். மேலும், இதுதொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என முழக்கமிட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அவரை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றனர். அவரிடம் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: