சேலம், மார்ச் 26-
போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயலும் தங்களது நிலத்தை மீட்டு தரக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதியினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. அப்போது, ஆத்தூர் கெங்கவல்லியை சேர்ந்த சண்முகம்- லலிதா தம்பதியினர் தீடீரென மண்ணெண்ணையை தங்கள் மீது ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். இதனை கண்ட காவலர்கள் ஓடிவந்து இருவரையும் தடுத்து நிறுத்தி மீட்டனர். இதன்பின் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வாகனத்தில் ஏற்ற முயன்றபோது, வாகனத்தில் இருந்து கீழே இறங்கி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து இருவரையும் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில் தங்களுடைய நிலத்தை சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடமிருந்து தங்களது நிலத்தை மீட்டுத்தர வேண்டும் எனக்கோரி தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீக்குளிப்பு முயற்சி சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: