திருப்பூர், மார்ச் 26-
சாலையை சீரமைக்கக்கோரி ஜெய்நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் திங்களன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் காங்கேயம் சாலையிலுள்ள ஜெய்நகர் 3 ஆவது வீதியில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகிறோம், எங்கள் பகுதியில் உள்ள ஜெய்நகர் முதல் அத்திமரத்து புதூர் வரை செல்லும் சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. மழை காலங்களிள் சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆகவே மாவட்ட ஆட்சியர் உரிய தலையீடு செய்து, சாலை வசதி ஏற்படுத்தி தர ஆவண செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: