திண்டுக்கல், மார்ச்.25
திண்டுக்கல் அருகே 2500 ஆண்டுகளுக்கு காலத்திற்கு முந்தைய சங்க கால தமிழர்களாகிய நமது முன்னோர்கள் புதைக்கப்பட்ட அரிய கல்வட்டம் கண்டறியப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் செங்குறிச்சி. இந்த ஊரின் அருகேயுள்ளது மாமரத்துப்பட்டி. இங்குள்ள குளத்தின் அருகே தொல்லியல் ஆய்வாளர் நாராணமூர்த்தி, பழனியாண்டவர் கலைக்கல்லூரியின் பண்பாட்டுத்துறை பேராசிரியர் முனைவர் அசோகன், மற்றும் முனைவர் கன்னிமுத்து. அய்யலூர் ஆர்.வி.எஸ். குமரன் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் தங்கராஜ், பண்பாட்டுத்துறை மாணவர்கள் சங்கன், சுரேஷ், விஜயகுமார், நாகராஜ், வல்லரசு, குணசேகரன்.நடேஷ்வரன், பத்திரிக்கையாளர்கள் இலமு (தீக்கதிர்), சங்கர் (நியுஸ் 18) ஆகியோர் ஆய்வு பணி மேற்கொண்டனர். அப்போது 2500 ஆண்டு பழமையான சங்க கால கல்வட்டம் கண்டறியப்பட்டது. கல்வட்டம் கி.மு,5 முதல் கி.மு.10 வரையிலான காலக்கட்டத்தை சேர்ந்தவை என நாராயண மூர்த்தி கூறினார். இது பற்றி அவர் மேலும் கூறுகையில் கல்வட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி தாலுகா நெய்க்காரபட்டி, இரவிமங்களம், பழனி, ஐவர்மலை, கலையமுத்தூர், உள்ளிட்ட பல பகுதிகளில் ஏராளமாக உள்ளன. இதே போல் அம்பிளிக்கை, வேடசந்தூர், கல்பட்டி, திண்டுக்கல் அருகே அக்கரைப்பட்டி, விராலிபட்டி, தவசிமடை, நத்தம், கோமனாம்பட்டி. நிலக்கோட்டை அருகே தாதம்பட்டி. தாண்டிக்குடி, சிறுமலை, கொடைக்கானல், பெருமாள்மலை, மன்னவனூர், மஞ்சம்பட்டி, செம்பகனூர், அடுக்கம், பண்ணைக்காடு, ஆகிய ஊர்களிலும் கல்வட்டம் உள்ளது. தற்போது மாமரத்துப்பட்டியிலும் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆயிரக்கணக்கான இடங்களில் கல்வட்டம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை அந்தந்த பகுதி மக்கள் பாதுகாக்க வேண்டும். ஏனெனில் இது நமது சங்க தமிழர்களின் தொல் எச்சமாக கருதப்படுகிறது. தாண்டிக்குடியில் மட்டும் தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது. சங்க தமிழர்களான நமது முன்னோர்கள் இறந்த பிறகு அவர்களை புதைக்கிற வழக்கம் இருந்து வந்துள்ளது.

ஆரியர்களிடையே இறந்தவர்களை எரிக்கிற வழக்கம் இருந்தள்ளது. நமது சங்கத் தமிழர்கள் முன்னோர்களை புதைக்கிற வழக்கத்தை 13 வகையான வடிவங்களில் இறந்தவர்களின் உடல்களை புதைத்தார்கள். அவற்றில் அடையாளங்களாக நாம் முதுமக்கள் தாழிகளாக, கல்வட்டங்களாக, கல்திட்டைகளாக, கல்பதுகைகளாக, கல்குடுவைகளாக என பல வடிவங்களை காண முடிகிறது. தமிழர்களின் இந்த வழக்கம் இந்த வழக்கம் வடஇந்தியாவிற்கு பரவி, மத்தியதரைக்கடல் வழியாக பாரசீகத்திற்கும் பரவியது. ஆதிச்சநல்லூரிலும் இந்த கல்வட்டங்களையும், முதுமக்கள் தாழிகளையும் அதன் எச்சங்களையும் நாம் காண முடியும். அது போல திண்டுக்கல் மாவட்டத்தில் அரிதான இந்த கல்வட்டங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கிடக்கின்றன. பெருங்கற்கால நினைவுச்சின்னங்களாக இந்த கல்வட்டங்கள் திகழ்கின்றன. இவற்றை பாதுகாப்பது நமது கடமை என்று நாராயண மூர்த்தி தெரிவித்தார்.

(நநி)

Leave A Reply

%d bloggers like this: