இந்தியாவின் மாபெரும் புரட்சியாளர் மற்றும் இளைஞர்களின் மிகப்பெரிய உத்வேகத்தை ஏற்படுத்தியவர் என போற்றப்படும் பகத்சிங் மார்ச் 23,1931 அன்று ஆங்கில காவல் அதிகாரியை கொலை செய்ததற்காக தூக்கிலிடப்பட்டார்.

பகத்சிங் தனது கடைசி நிமிடம் வரை புத்தகம் படித்தவர். அவர் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு லெனினின் நினைவுகள்(REMINISCENCES OF LENIN) என்ற புத்தகத்தை படித்தார். இந்த புத்தகம் ரஷ்ய புரட்சியாளர் லெனின் அவர்களின் வாழ்க்கை மற்றும் சித்தாந்தங்களை கூறுகிறது.

இங்கு அரசியல் பலனிற்காக பகத்சிங்கை பயன்படுத்தும் பாஜக சமீபத்தில் லெனினின் சிலை உடைத்து அதன் உச்சகட்ட பிற்போக்கு சிந்தனையை உலகிற்கு பறைசாற்றியது. புரட்சிகர வாழ்கையால் பல மக்களின் மனதில் பதிந்த லெனினை கற்பதற்கு பதிலாக சிலையை அகற்றினால் லெனினிசத்தை ஒழித்திடலாம் என நினைக்கும் இவர்களின் செயல் வெறும் காணல்நீர்தான். பாஜகாவால் லெனின் அவர்களின் சிலையை பல துண்டுகளாக உடைக்க முடியும் ஆனால் அவர் கொடுத்த சித்தாந்தங்களை ஏதும் செய்ய இயலாது.

Leave A Reply

%d bloggers like this: