சண்டிகர்,
ஹரியானாவில் பள்ளி மாணவனை அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் 18 வயதுடைய மாணவன் தேர்வு எழுதுவதற்காக தனது சகோதரியுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தான் அப்போது திடீரென அடையாளம் தெரியாத நபர், மாணவனை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் பாதிக்கப்பட்ட மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இதனையடுத்து மாணவியின் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று சில மாதங்களுக்கு முன்பு எனது மூத்த மகனை ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். அதை பற்றி புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை, இந்நிலையில் தனது மற்றொரு மகனையும் கொலை செய்யப்பட்டான் என்று மாணவனின் பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர்

Leave A Reply

%d bloggers like this: