ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் மோர்னே மோர்கலின் ஒட்டுமொத்த டெஸ்ட் விக்கெட்டுகளின் எண்ணிக்கை 301 ஆக உயர்ந்தது.33 வயதான மோர்னே மோர்கல் இதுவரை 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 301 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதன் மூலம் டொனால்டு,பொல்லாக், நிதினி, ஸ்டெயின் ஆகியோருக்கு பிறகு 300-க்கு மேல் விக்கெட் வீழ்த்திய 5-வது தென்ஆப்பிரிக்க பவுலர் என்ற சிறப்பை பெருமையை மோர்கல் பெற்றார்.மோர்னே மோர்கல்ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.