கொல்கத்தா:
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (GJM) கட்சியும் வெளியேறியுள்ளது. சிவசேனா, தெலுங்கு தேசம் வரிசையில், கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சாவின் வெளியேற்றம் அமைந்துள்ளது. மேற்கு வங்கத்தில் கால்பதிக்க பாஜக தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ள சூழலில், ஜிஜேஎம் கட்சியின் வெளியேற்றம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

“பாஜக, கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியுடன் வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமே வைத்துள்ளது என்று, மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்; அரசியல் தீர்வுகளுக்கான கூட்டணி இது இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்; இதன் மூலம், கூர்க்காக்கள் மீது பாஜகவுக்கு நிஜமான அக்கறை இல்லை என்பது அம்பலமாகி யுள்ளது” என்று கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சி தலைவர் எல்எம் லாமா கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: