சென்னை : அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்திற்கான புதிய துணைவேந்தராக ஆர்எஸ்எஸ் சார்புடைய சூரியநாராயண சாஸ்திரி யை தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித் நியமித்திருக்கிறார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

சூரிய நாராயண சாஸ்திரி  2009-ம் ஆண்டு காலகட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பல்கலைக் கழகத்தில் இளநிலை சட்டக்கல்வி இயக்குநராகப் பணிபுரிந்தவர். அப்போது அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தது. புகாரின் மீதான விசாரணையில் புகார் உறுதி செய்யப்பட்ட நிலையில் சூரியநாராயண சாஸ்திரி மீது ஒழுங்கு நடவக்கையும் எடுக்கப்பட்டது. தற்போது இவர் மாகாராஷ்டிரா மாநிலம்  புனே பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கட்டளையை ஏற்று பிரதமர் அலவலகம் தலையீட்டின் பேரில்  அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

புதிய துணைவேந்தரை நியமிப்பது தொடர்பாக, நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஜெகதீசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் அளித்த பட்டியலில் இருந்த மூவரில், பாலு என்பவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வியின் டீனாக இருந்தவர். தற்போது தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அதிகப்படியான தகுதிகள் உள்ளவராக இவரைப் பார்க்கின்றனர். இவருக்கு எந்தவித அரசியல் பின்புலமும் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த மூவரைத் தாண்டி, வேறொருவர் நியமிக்கப்பட்டிருப்பதில் விதிமீறல்கள் நடந்துள்ளன. ஆந்திராவைப் பின்புலமாகக் கொண்டவர் தம்ம சூரிய நாராயண சாஸ்திரி. சம்ஸ்கிருத மொழியின் மீது அதிகப் பாசம் கொண்டவர். சட்டப் பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்தபோது, அதைப் பலமுறை வெளிப்படுத்தியவர். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரைகளை நிராகரித்து, வேறொருவரைக் கொண்டு வந்ததன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் இருக்கிறது. இதனை நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என்று முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்க பொதுச்செயலாளர் மார்க்ஸ் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆத்துமீறிய நியமணத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.  திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அம்பேத்கர் பெயரிலான பல்கலைக்கழகத்திற்கு எதிரான நியமனம் எனவும், இந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதே போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட பலரும் உயர்கல்வியை காவிமயமாக்கும் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்நியமனத்தைக் கண்டித்து திராவிடர் கழகத்தலைவர் கீ.வீரமணி அவர்கள் வரும் 27 ம் தேதி போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.