இராசிபுரம்:
ரேசன் கடைகளில் தட்டுப்பாடின்றி வழங்கிட வேண்டும் என விவசாய தொழிலாளர்கள் நாமகிரிப்பேட்டை ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

விவசாய தொழிலாளர் சங்கத்தின் நாமகிரிப்பேட்டை ஒன்றிய 5 வது மாநாடு புதனன்று ஒன்றிய தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் அமிர்தலிங்கம் மாநாட்டினை தொடங்கி வைத்து பேசினார். மாவட்டசெயலாளர் சி.துரைசாமி வாழ்த்துரை ஆற்றினார். ஒன்றிய செயலாளர் சபாபதி அறிக்கையை சமர்ப்பித்து பேசினார். இம்மாநாட்டில் 100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சி பகுதிகளிலும் விரிவுபடுத்தி வேலை வழங்கிட வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, குடிநீர் இணைப்புகள் வழங்கிட வேண்டும். முள்ளுகுறிச்சி பகுதியில் அரசு மருத்துவமனையினை மேம்படுத்த வேண்டும். ஆயில்பட்டி, மங்களபுரம் பகுதியில் விவசாய தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு திர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள் தேர்வு:
இம்மாநாட்டில் ஒன்றிய தலைவராக செல்வராஜ், ஒன்றிய செயலாளராக சபாபதி மற்றும் 13 பேர் கொண்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.