ஈரோடு, மார்ச் 22-
புதுக்கோட்டையில் தந்தை பெரியாரின் சிலை உடைத்ததை கண்டித்தும், சமூக பதற்றத்தை உருவாக்கும் வகையில் பேசி வரும் பாஜக தலைவர்களை கண்டித்தும் அனைத்து கட்சிகள் சார்பில் ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் வியாழனன்று கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப.மாரிமுத்து, கே.துரைராஜ், பி.பி.பழனிசாமி, திராவிடக் கழக மாநில அமைப்புச் செயலாளர் த.சண்முகம், சிபிஐ மாவட்ட செயலாளர் கே.திருநாவுக்கரசு, ஈரோடு காங்கிரஸ் தலைவர் ரவி, தெற்கு காங்கிரஸ் தலைவர் ஜி.ராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் என்.விநாயக மூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திரளானோர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.