கோவை, மார்ச் 22-
பிளஸ் 1 கணித தேர்விற்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, கோவை ராமகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சகஸரநாமம் என்ற தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியர் புதனன்று மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் நடப்பாண்டில் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் கடந்த 20ம் தேதி கணிதத் தேர்வு நடந்தது. இதில், கேட்கப்பட்டுள்ள கேள்விகள் மிகவும் கடினமானதாக, கல்லூரி மாணவர்களுக்கு கேட்கும் கேள்விகள் வந்துள்ளது. இதனால் ,இத்தேர்வை எழுதிய 4 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, இத்தேர்வை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்த வேண்டும். அல்லது கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.