ஈரோடு, மார்ச் 22-
பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் 18 ஆவது அமைப்பு தின விழா வியாழனன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

ஈரோடு பிஎஸ்என்எல் மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற விழாவிற்கு ஆர்.காளிமுத்து தலைமை வகித்தார். சங்கத்தின் கொடியினை பன்னீர்செல்வம் ஏற்றி வைத்தார். மாவட்ட செயலாளர் எல்.பரமேஸ்வரன் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில், மாநில செயலாளர் வி.மணியன், ஓய்வூதியர் சங்க மாநில துணை செயலாளர் என்.குப்புசாமி, டி.பி.பழனிசாமி, என்.புண்ணியக்கோட்டி, சண்முகவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஈரோடு டெலிபோன் பவன் பகுதியில் நடைபெற்ற விழாவிற்கு கிளைத் தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். கிளை செயலாளர் வி.ரவி, ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் சரவணன், கிளை நிர்வாகிகள் சாந்திகுமார், துரைசாமி, ஈஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல், ஈரோடு மாவட்டத்தில் பவானி, கோபி, சத்தி, பெருந்துறை, கொடுமுடி, வெள்ளக்கோவில் உட்பட அனைத்து கிளைகளிலும் அமைப்பு தினத்தை முன்னிட்டு கொடியேற்றி இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.