கோவை, மார்ச் 22-
நரிக்குறவர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக்கோரி கோவையில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நரிக்குறவர் சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை முன்வைத்து வியாழனன்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமூகநீதிக்கான நரிக்குறவர் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சத்தியகுமார் தலைமை தாங்கினார். சமூகநீதிக் கட்சியின் தலைவர் பன்னீர்செல்வம், பொதுச் செயலாளர் வெள்ளமடை நாகராசு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காரமடை, பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: