பேஸ்புக்கில் இருந்து 5 கோடி பேரின் தகவல்களை திருடியுள்ள ‘கேம்பிரிஜ் அனலட்டிக்கா’, அமெரிக்க தேர்தல்கள் உட்பட பல முடிவுகளை மாற்றியமைக்க அந்த தனிநபர் விபரங்களை பயன்படுத்தியிருப்பதாக செய்தி வந்திருக்கிறது.

மிக அதிர்ச்சிகரமான செய்தி. தகவல் தான் புதிய எண்ணெய் என்று சொல்லப்படுவதன் மிகச் சிறிய உதாரணம் இது.

பேஸ்புக்கிடம் இருந்து சில தகவல்களைத் திருடினால் இவ்வளவு பெரிய தாக்கம் ஏற்படும் என்றால், பேஸ்புக் நினைத்தால் என்ன செய்ய முடியும் என்பது புரிகிறது.

ஆதார் போன்ற திட்டங்களாக இருந்தாலும், ஜியோ, பேஸ்புக் வழங்கிய பிரீ பேஸிக்ஸ் போன்ற கவர்ச்சிகர தனியார் முயற்சிகள் என்றாலும் – ஜி.எஸ்.டி.என் ஏற்பாடாக இருந்தாலும் – இவையெல்லாம் ஏன் – சமூக வலைத்தளம் என்ற பெயரில் நடக்கும் தகவல் திரட்சிக்கான அனைத்து ஏற்பாடுகலில் இருந்தும் உரிய தடுப்பு நடவடிக்கை வேண்டும் எனச் சொல்வது இதிலிருந்துதான்.

நமது தனி நபர் விபரங்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. இதுபற்றி வழக்கு போட்டால், 13 அடி பொருண்மை கொண்ட சுவருக்குள்ளே விபரங்களை வைத்து பாதுகாக்கிறோம் என மங்குனி விளக்கம் கொடுக்கும் அரசைத்தான் நாம் பெற்றிருக்கிறோம். அவர்கள் மங்குணிகள் இல்லை, மக்களை திசைதிருப்பினால் போதும் என்றே அவர்கள் இப்போதும் நினைக்கின்றனர்.

நம் தகவல் நம் உரிமை – இந்த முழக்கத்திற்கான பொருள் உணர்ந்த குடிமக்களை உருவாக்குவது, அதன் மூலம் பொருளுள்ள எதிர்ப்பை வளர்ப்பது நம் கடமையும் ஆகும்.

Leave a Reply

You must be logged in to post a comment.