திருப்பூர், மார்ச் 22-
திருப்பூரில் தனியார் நிட்டிங் நிறுவன உரிமையாளர் வீட்டில் 40 சவரன் நகை மற்றும் ரூ.8 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், சில மணி நேரங்களில் கொள்ளையன் கைது செய்யப்பட்டு பணம், நகை மீட்கப்பட்டது.

திருப்பூர் அனுப்பர்பாளையத்தை அடுத்ததோட்டத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். திருப்பூர் காட்டன் மில் சாலையில் தனியார் நிட்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் புதனன்று அருண்குமார் வெளியூர் சென்றிருந்த நிலையில், அவரின் வீட்டிற்குள் நள்ளிரவு புகுந்த மர்ம நபர் பீரோவில் இருந்த 40 சவரன் நகை மற்றும் ரூ.8 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். இதுதொடர்பாக அனுப்பர்பாளையம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இதில், அதேபகுதியில் வசிக்கும் கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவா என்பவர் மீது சந்தேகமடைந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பணம், நகையை கொள்ளையடித்தது உறுதி செய்யப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சிவா மீது ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: