திருப்பூர்,

காங்கேயம் அருகே நடந்த சாலைவிபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியல் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காங்கேயம் அருகே வெள்ளக்கோவிலில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராமச்சந்திரன், அவரது மனைவி ஜெயலட்சுமி, கார் ஓட்டுநர் பிரவீன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.