திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நிர்வாக நடைமுறைக்கு மாறாக தொடர்ந்து ஆய்வு கூட்டம் என்ற பெயரில் ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். பெண் ஊழியர்களை தேவையின்றி ஆட்சியரின் அறைக்குள் நீண்ட நேரம் நிற்க வைப்பது, வயதில் மூத்த ஊழியர்களை அவமரியாதையாக நடத்துவது போன்ற ஊழியர் விரோத போக்கில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மேலும் ஜனநாயக ரீதியாக கோரிக்கைகளை முன்வைத்து போராடும் ஊழியர்கள் மீது காவல்துறையை ஏவி தாக்குவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். எனவே ஆட்சியர் கந்தசாமி மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக மன்னார்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்ட தலைவர் கே. சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் மகேஷ் விளக்கவுரையாற்றினார். முத்துக்குமார், க. ஜெயபால் உள்ளிட்ட நிர்வாகிகள் தோழமை சங்க தலைவர்கள் உரையாற்றினார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.