கோவை, மார்ச் 21-
வீட்டுமனை பட்டா வழங்குவதில் குளறுபடி நடைபெறுவதாக குற்றம்சாட்டி புதனன்று சூலூர் தாலுகா அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட அருந்ததிய முன்னேற்ற கழக நிறுவன தலைவர் கோவை மணி அரசு கூறுகையில், கோவை சூலூர் வட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட பாப்பம்பட்டி, இடையர்பாளையம், பொன்னாகணி பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் மொத்தம் உள்ள 241 குடும்பங்களில் 50 குடுபங்கள் மட்டும் பயன்பெறும் வகையில் வட்டாட்சியர் செயல்படுகிறார். மற்ற குடும்பத்தில் உள்ள பயனாளிகள் இதுகுறித்து கேட்கும் போது எந்த பதிலும் கூறாமல் காலம் தாழ்த்தி மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறார். தற்போது நில ஆக்கிரமிப்பாளர்கள் நிலவரி கட்டுவதால் ஏழை, எளிய மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். இதனையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave A Reply

%d bloggers like this: