சென்னையைச் சேர்ந்த கனிஷ்க் தங்க நகை கடை உரிமையாளர் வங்களில் ரூ.824.15 கோடி முறைகேடு செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள பிரஷாந்த் டவர்ஸில் செயல்பட்டு வரும் தங்க நகை தயாரிப்பு நிறுவனம் கனிஷ்க். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின் பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, ஐடிபிஐ வங்கி, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, சிண்டிகேட் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆந்திர வங்கி, யூகோ வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 14 வங்கிகளை மோசடி செய்து ரூ. 824 .15 கோடி கடன் பெற்றுள்ளார் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சிபிஐ இணை இயக்குனருக்கு 16 பக்கங்கள் அடங்கிய கடிதத்தை அனுப்பியுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று பூபேஷ் குமார் ஜெயினை மத்திய கலால் வரித்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் ரூ.20கோடி ஜிஎஸ்டி வரித்தொகையும் கட்டவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: