கோவை, மார்ச் 21-
கோவையில் மாற்றுத்திறனாளிகள் 600 பேருக்கு இலவச பேருந்து அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் இலவச பேருந்து அட்டை வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டிலும் இதற்கான பணிகள் நடந்து வருகிறது. கோவையில் சுமார் 3 ஆயிரத்து 800 மாற்றுத்திறனாளிகள் இலவச பேருந்து அட்டை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான இலவச பேருந்து அட்டை பெற விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் தற்போதுவரை பார்வையற்றோர், கை, கால் ஊனமுற்றோர், காது கேளாதோர், வாய் பேசாதோர் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பேருந்து அட்டை கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

இதுகுறித்து மாற்றுத்திறனாளி நல அலுவலர்கள் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து அட்டை வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. தற்போது பெறப்பட்ட விண்ணப்பங்கள் போக்குவரத்து துறை அலுவலகத்திற்கு அனுப்பட்டுள்ளது. இதில் சுமார் 600 பேருக்கு முதற்கட்டமாக இலவச பேருந்து அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிவரை மாற்றுத்திறனாளிகள் பேருந்து அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: