புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் பெரியார் சிலையை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக சிஆர்பிஎப் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே குண்டுக்குளம் கரையில் உள்ள பெரியார் சிலை திங்கள் கிழமையன்று சேதப்படுத்தப்பட்டது. இதில் சிலையின் தலைப்பகுதி துண்டிக்கப்பட்டது. இந்தச்சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், சிலை உடைக்கப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் செந்தில்குமார் என்பவரிடம் திருச்சி டிஐஜி லலிதா லட்சுமி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் செந்தில்குமார் சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய ஆயுதப்படையில் தலைமைக்காவலராக பணிபுரிந்து வருவதும், விடுமுறையில் வந்துள்ள அவர் குடிபோதையில் பெரியார் சிலையை சேதப்படுத்தியுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு செந்தில்குமார் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.