கோவை, மார்ச் 21-
கோவையில் பாஜக பிரமுகர் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை அடையாளம் தெரியாத நபர்கள் தீவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக கோவை மாவட்ட தலைவராக இருப்பவர் நந்தகுமார். புதனன்று அதிகாலை பீளமேடு பகுதியில் உள்ள இவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோலை ஊற்றி தீவைத்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து மாநகர காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து சிங்காநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

மற்றொரு தீவைப்பு: இதற்கிடையே, கோவை செல்வபுரம் இந்திரா நகரை சார்ந்தவர் உமாபதி. தனியார் பைனான்ஸ் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தீவைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து செல்வபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் அடுத்தடுத்த இந்த தீவைப்பு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: