சென்னை
காவலர்கள் தற்கொலை முயற்சி                                                                                                                                                  சென்னை டிஜிபி வளாகத்தில் காவலர்கள் இருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது அங்கு பணியில் இருந்த காவலர்கள், அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி மீட்டனர். முன்னதாக தேனியில் காவல் உயரதிகாரிகள் சாதி ரீதியாக இடமாற்றம் செய்ததாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
புதுதில்லி
குண்டு துளைக்காத வாகனங்கள்                                                                                                                                                        மத்திய அரசு புதிதாக 100 குண்டு துளைக்காத வாகனங்களை ஜம்மு – காஷ்மீர் மற்றும் நக்சலைட்டுகள் இருக்கும் பகுதிகளில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பயன்படுத்த வாங்கியுள்ளது. இந்த வாகனத்தில் 12 வீரர்கள் வரை செல்லலாம். இது ஏ.கே 47 ரக துப்பாக்கிகளை தாங்கும் திறன் கொண்டது.
சென்னை
யுஜிசி சிறப்பு அந்தஸ்து                                                                                                                                                                          தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 8 கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்தை யு.ஜி.சி. வழங்கியுள்ளது.  ஆண்டுதோறும், நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் தரத்தைப் பரிசோதித்து சிறப்பு அந்தஸ்தை வழங்கி வருகிறது யு.ஜி.சி. அதன்படி, புதனன்று 62 உயர் கல்வி நிறுவனங்களுக்கு முழு சுயாட்சிக்கான அந்தஸ்தை வழங்கியுள்ளது.
சென்னை
துண்டிக்கப்பட்ட பெட்டிகள்                                                                                                                                                                    சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் பகுதியில் வேகமாகச் சென்ற மின்சார ரயிலிலிருந்து இரண்டு பெட்டிகள் திடீரெனத் துண்டிக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். ரயில் பெட்டிகளை இணைக்கும் ‘கப்ளிங்’ உடைந்திருப்பது பின்னர் தெரியவந்தது. இதில் நல்வாய்ப்பாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சென்னை
பொங்கினார் தமிழிசை                                                                                                                                                          தொண்டர்கள் மத்தியில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை, ‘ரத யாத்திரை பிரச்சனையில்லை, ரத யாத்திரை தமிழகத்துக்குள் வரக்கூடாது என்று சொல்லிதான் பிரச்சனை செய்கிறார்கள். இந்துக்கள் அத்தனைபேரும் சிந்தனை செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது. இனிமேல் பொறுத்துக் கொள்ள மாட்டோம். நாங்கள்பொங்கி எழுந்தால் தமிழகம் தாங்காது’ என பேசினார்.
மதுரை
ஸ்டெர்லைட் : நோட்டீஸ்                                                                                                                                                                   ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவைத் விசாரித்த நீதிமன்ற அமர்வு, ‘சிப்காட் நிறுவன மேலாண்மை இயக்குநர், திட்ட அலுவலர் மற்றும் ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்’ என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
சென்னை
ரயிலில் கிடந்த தோட்டாக்கள்                                                                                                                                                    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு தில்லியிலிருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி வகுப்பு பெட்டியில் 6 தோட்டாக்கள் அனாதையாக கிடந்தன. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ரயிலில் யார் அதைக் கொண்டு வந்தார்கள் என்றுத் தெரியவில்லை. இது லைசென்ஸ் பெற்றதா என்றும் விசாரித்து வருகிறோம்’ என தெரிவித்தனர்.
சென்னை
10 முதல்வர்களுக்கு கடிதம்                                                                                                                                                         ‘15-வது நிதி நிலை பகிர்வின் ஆய்வு வரம்புகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் மாநிலத்துக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இந்த அநீதிக்கு எதிரான எனது கோரிக்கைக்கு தாங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்’ என்று 10 மாநில முதல்வர்களுக்கும், ஆய்வறிக்கையை மாற்றியமைக்க வேண்டும் என பிரதமருக்கும்  திமுக செயல் தலைவர்  ஸ்டாலின்  கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை:
‘ஏன் அஞ்சலி செலுத்தவில்லை?’                                                                                                                                       நடராசன் மறைவுக்கு முதல்வர், துணை முதல்வர் இரங்கல் கூட தெரிவிக்காதது பண்பாடற்ற செயல் என்ற சீமானின் விமர்சனம் தொடர்பான கேள்விக்கு ஜெயக்குமார், ‘ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட குடும்ப நிகழ்வுக்கு எப்படி செல்ல முடியும்? ஒட்டும், உறவும் இல்லை என்பதால், நடராசனுக்கு இரங்கலோ அஞ்சலியோ செலுத்தவில்லை’ எனத் தெரிவித்தார்.
புவனேஸ்வரம்:
விபத்துக்கு உள்ளான ஐ.ஏ.எப். விமானம்                                                                                                                        ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் இந்திய விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டதில் விமானம் தீப்பற்றி முற்றிலுமாக எரிந்தது. எனினும், அதில் இருந்த பயிற்சி விமானி வெளியே குதித்து உயிர் தப்பினார். அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

You must be logged in to post a comment.