ஈரோடு, மார்ச் 21-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் விரோத போக்கை கண்டித்து புதனன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு வட்டத் தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். கிராம சுகாதார செவிலியர்கள் சங்க மாநில செயலாளர் உஷா ராணி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கே.வெங்கிடு, வட்ட செயலாளர் சுகுமார், வருவாய்த்துறை இணை செயலாளர் ரமேஷ், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

Leave A Reply

%d bloggers like this: