பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாவட்டத்தலைவர் நந்த குமார். கோவை பீளமேட்டில் உள்ள இவரது வீட்டின் முன் காரை நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை நந்தகுமாரின் வீட்டிற்கு வந்த அங்கிருந்த  காரின் முன்பகுதியில் தீ வைத்து விட்டு சென்றனர். இதில் காரின் முன் பகுதி முழுவதுமாக எரிந்து சேதமானது. இதுகுறித்து கோவை காவல்துறை ஆணையர் பெரியய்யா, துணை ஆணையர் லட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: