திருப்பூர். மார்ச். 21-
திருப்பூரில் தனியார் பள்ளியில் படிக்கும் சிறுமியின் மீது காபி கொட்டியதில் உடல் வெந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் சிறுபூலுவப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவர் திருப்பூர் மாநகர காவல்துறையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இவரின் மகளான காவியப்பிரியா, அந்த பகுதியில் உள்ள தனியார் நர்சரி பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறாள். புதனன்று பள்ளி வளாகத்தில் சிறுமி காவியப்பிரியா விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது, பள்ளியில் வேலை பார்க்கும் உதவியாளர் கொண்டு சென்ற காபி எதிர்பாராதவிதமாக சிறுமி காவியப்பிரியா மீது கொட்டியதாக கூறப்படுகிறது. இதில் சிறுமியின் உடல் முழுவதும் பல இடங்களில் வெந்தது. இதனால் வலியால் அலறி துடித்த நிலையில் பள்ளி ஊழியர்கள் சிறுமியை மீட்டு காலேஜ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து சிறுமியின் தந்தை முத்துசாமி 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: