உத்திரமேரூர் அரசினர் பொது மருத்துவமனை சார்பில் காச நோய் தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி செவ்வாயன்று (மார்ச் 20) நடந்தது. பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் மாவட்ட காச நோய் தடுப்புப் பிரிவு இணை இயக்குனர் செந்தில் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட சுகாதார மேற்பார்வையாளர் பாண்டியன், முதுநிலை வட்டார ஒருங்கிணைப்பாளர் ஜோஸ்லின்மேரி, சுகாதாரப் பணியாளர் ஜோதிபிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆய்வக நிபுணர் சியாமளா அனைவரையும் வரவேற்றார்.

ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களை காசநோய் உடனடியாக தாக்குவது குறித்தும், காச நோய் கண்டறியும் முறைகள், காச நோய் இருந்தால் அதனை தடுக்கும் முறைகள், ஊட்டச்சத்து மிக்க உணவு பழக்க வழக்கங்கள் குறித்தும் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் அரசு பொது மருத்துவமனை ஊழியர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.