காபூல்,
ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் 26 பேர் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் காபூல் பல்கலைக்கழகம் மற்றும் அலி அபத் மருத்துவமனை ஆகியவற்றிற்கு அருகே அடுத்தடுத்து கார் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 18 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

Leave A Reply

%d bloggers like this: