நாமக்கல், மார்ச் 20-
பொதுவழித்தட ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக பரமத்திவேலூர் அருகேயுள்ள கரிச்சிப்பாளையம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியத்திடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: கரிச்சிப்பாளையம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகிறோம். குடியிருப்புகள், மயானம் மற்றும் விளை நிலங்களுக்கு செல்ல பொதுவழித்தடம் உள்ளது. இந்த சாலையை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறேம்.இந்நிலையில் கடந்த மார்ச் 13ஆம் தேதி எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக இந்த வழியாக சென்றோம். அப்போது கரிச்சிப்பாளையத்தை சேர்ந்த நபர் ஒருவர், இந்த வழித்தடம் எனக்கு சொந்தமானது, யாரும் இந்த தடத்தை பயன்படுத்தக் கூடாது என வாக்குவாதம் செய்தார். மேலும், அவ்வழியாக யாரும் செல்ல முடியாத வகையில் தற்போது தடையை ஏற்படுத்தியுள்ளார். எனவே, தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து பொதுவழித்தட ஆக்கிரமிப்பை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்திட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: