ஈரோடு, மார்ச் 20-
புதிய குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைத்து தரக்கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம், சித்தோடு கன்னிமாமேடு பகுதியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 75 குடும்பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகின்றனர். இங்கு 11 வருடங்களுக்கு முன்பு இரண்டு ஆழ்குழாய் கிணறு போடப்பட்டுள்ளது. அதில் ஒன்று மட்டுமே தற்போது செயல்பட்டு வருகிறது. மேலும், அங்குள்ள மேல்நிலைத்தொட்டி உடைந்து குடிநீர் வெளியேறி வருவதால், குடிநீர் தேவைகளுக்கான ஆற்றுநீரையே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே, தங்கள் பகுதிக்கு இரண்டு புதிய மேல்நிலை தொட்டி கட்டிடக்கோரியும், உடைந்த குடிநீர் குழாய்களை சீரமைத்து தரக்கோரியும் அப்பகுதி மக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதாவிடம் மனு அளிக்
கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: