கோவை, மார்ச் 20-
அரசுத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் மகளிர் தின கருத்தரங்கம் செவ்வாயன்று கோவையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம் செவ்வாயன்று கோவை தாமஸ் கிளப்பில் உள்ள அரசு ஊழியர் சங்க கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு மாவட்ட இணைச்செயலாளர் வி.ஆர்.சாந்தாமணி தலைமை வகித்தார். எம்.ஆர்.பரமேஸ்வரி வரவேற்று பேசினார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணைச்செயலாளர் எம்.கிரிஜா, பொதிகை தொலைக்காட்சியின் தொகுப்பாளர் எஸ்.பொற்கொடி ஆகியோர் சர்வதேச மகளிர் தின சிறப்பை விளக்கி உரையாற்றினார்.

ஓய்வூதியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எஸ்.சந்திரன், மாவட்ட தலைவர் என்.அரங்கநாதன், மாவட்ட செயலாளர் என்.மதன், அம்பேத்கர் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் கே.கணேசன் மற்றும் சாரதா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முடிவில் எம்.அமிர்தகலாவதி நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.