நாமக்கல், மார்ச் 20-
நாகர்பாளையம் ஊராட்சி வையப்பமலை பகுதியில் பொதுக்கழிப்பிடத்தினை திறக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையத்தினை அடுத்த நாகர்பாளையம் ஊராட்சி வையப்பமலை பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து
வருகின்றன. இங்குள்ள வையப்பமலை பேருந்து நிலையத்தின் அருகே வாரச்சந்தை நடைபெறும். இதனருகில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பொதுக்கழிப்பிடம் சுகாதார மற்ற நிலையில் பயன்பாட்டில் இல்லாத நிலையில் காணப்படுகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் தெரிவித்ததாவது, இப்பகுதியில் பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் கழிப்பிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முறையாக திறக்கபடாதால் பாழடைந்து காணப்படுகிறது.இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றோம்.எனவே அரசு விரைந்துநடவடிக்கை எடுத்து கழிபிடத்தினை சரி வர திறந்து முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்

Leave A Reply

%d bloggers like this: