சேலம், மார்ச் 20-
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 17 ஆவது பட்டமளிப்பு விழாவில் முதுநிலை மற்றும் இளநிலை பட்டங்களை முடித்த 67 ஆயிரத்து 82 மாணவ, மாணவிகளுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பட்டங்களை வழங்கினார். இவ்விழாவில் 380 மாணாக்கர்கள் முனைவர் பட்டங்களையும், 128 மாணவ, மாணவியர்கள் தங்கப் பதக்கங்களையும் பெற்றனர். இந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ப.சந்திரசேகரன், உயர்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் சுனீல் பாலிவால், பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பொ.குழந்தைவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: