திருப்பூர். மார்ச். 20-
திருப்பூரில் நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாக வெட்டிய கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்பூர் பவானி நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் மற்றும் அவரின் தம்பி வெங்கடேஷ். இருவரும் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று இருவரும் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திங்களன்று பவானி நகர் பகுதியில் வந்து கொண்டிருந்த வெங்கடேசை சாலையில் வழிமறித்த 8 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் வெங்கடேசின் முகம், தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுகாயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வெங்கடேசை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட  நபர்களை தேடி வருகிறனர்

Leave A Reply

%d bloggers like this: