கோவை, மார்ச் 20-
நலிவடைந்து வரும் திரைத்துறையை மீட்க திரைப்படங்களுக்கான வரிகளை அரசு குறைக்க வேண்டும் என நடிகர் விவேக் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறுகையில், ‘க்ரீன் கலாம்’ திட்டம் மூலம் கடந்த 8 ஆண்டுகளாக கல்லூரி, பள்ளிகளில் மரக்கன்றுகள் நடும் பணியை மேற்கொண்டு வருகிறேன். தமிழகத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் நட வேண்டுமென்பது எனது இலக்கு. இதுவரை 29.30 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. பொது இடங்கள் மட்டுமின்றி, பள்ளி, கல்லூரிகளிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு, முறையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. பெரிய கல்வி நிறுவனங்களின் உதவி கிடைத்தால், ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவது என்ற எனது இலக்கை அடைய முடியும். போராட்டம் காரணமாக திரைப்படத் தயாரிப்புப் பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அதை நம்பி வாழும் ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, புதிய திரைப்படங்கள் வெளியாகாததால், தயாரிப்பாளர்கள், ரசிகர்கள், திரையரங்கினர், சினிமா விமர்சகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திரைத்துறை நலிவடைந்துள்ளது. எனவே, திரைப்படங்களுக்கான வரியைக் குறைக்க வேண்டும். அதேபோல, நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, திரைத்துறையில் நிலவும் பிரச்சனைகளைத்
தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: