சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரி, பல்கலைக் கழகமாக உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

சட்டப்பேரவையில் செவ்வாயன்று (மார்ச் 20)கேள்வி நேரத்தின் போது நாங்குநேரியில் திரைப்படக்கல்லூரி அமைக்க அரசு ஆவன செய்யுமா என்று காங்கிரஸ் உறுப்பினர் எச்.வசந்தகுமார் வின வினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், இந்தியாவில் பூனா, கொல்கத்தா ஆகிய இடங்களில் மத்திய அரசு சார்பில் திரைப்பட பயிற்சி மையம் உள்ளது. தமிழகத்தில் மாநில அரசே எம்ஜிஆர் திரைப்படக்கல்லூரியை சென்னையில் நிறுவியுள்ளது. இந்தக்கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் பிறகு, வேறு இடங்களில் திரைப்படக்கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கூட்டு குடிநீர் திட்டத்தில் காஞ்சிபுரம் : அமைச்சர் தகவல்

காஞ்சிபுரம் மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேலூர்-திருவண்ணாமலை கூட்டு குடிநீர் திட்டத்தில் காஞ்சிபுரத்தை இணைக்க பரிசீலிக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.சட்டப்பேரவையில் செவ்வாயன்று (மார்ச் 20) உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் எழுப்பிய வினாவிற்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார். மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், திண்டுக்கல் மாநகராட்சிக்கான குடிநீர் திட்டத்தில் 70 விழுக்காடு பணிகள் முடிந்துள்ளதாக கூறினார்.

Leave A Reply