தமிழகத்தில் உள்ள மருத்துவ நிறுவனங்களை பதிவு செய்யவும் அவற்றை முறைப்படுத்துவதற்குமான திருத்த சட்ட மசோதா செவ்வாயன்று (மார்ச் 20) சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சமர்ப்பித்தார்.

தமிழகத்தில் 1997ம் ஆண்டு தமிழ்நாடு தனியர் மருத்தவ நிறுவனங்கள் முறைப்படுத்தும் சட்டம் அமலில் உள்ளது. இச்சட்டத்தின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவ நிறுவனங்களை பதிவு செய்யவும், அவற்றை முறைப்படுத்தவும், அம்மருத்துவ நிறுவனங்கள் குறைந்த பட்ச வசதிகள் மற்றும் சேவைகள் அளிப்பதை உறுதி செய்யும் வகையில் திருத்தம் கொண்டுவர இந்த திருத்த மசோதா கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: