சர்வாதிகாரம் என்பது அனைத்தையும் அடக்கி ஒடுக்க கூடியதாகவும், ஜனநாயகமற்றதாகவும் இருக்க வேண்டும் என எந்த அவசியமும் இல்லை. எல்லோரையும் பேச அனுமதிக்கிற ஜனநாயகத்தை வைத்துக் கொண்டே, தான் நினைக்கிற அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டே இருக்கும். உங்களுக்கு பேச்சுரிமை உண்டு தான். கண்டனம் தெரிவிக்கும் உரிமை உண்டு தான். தெருமுக்கில் கூடி நின்று முழக்கமிடுகிற உரிமை கூட உண்டு தான். அவற்றையெல்லாம் அதிகாரம் பொருந்தியவர்கள் கேட்க வேண்டுமா என அவர்கள் கேட்கிறார்கள். அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தி, “கண்டன” பொதுகூட்டம் ஒன்றுக்கு தேதி குறித்து விட்டாலே அவர்கள் அஞ்சி விடுவார்கள் என எப்போதும் போலவே நாமும் “வலுவாக” நம்பிக் கொண்டே இருப்போம். பாஜக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று தான் முதலமைச்சர் நாற்காலியில் அமர வேண்டுமென நம்பிக் கொண்டிருப்பதை போலவே…..

John Paul

Leave A Reply