சென்னை,

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிக்கலா கணவர் ம.நடராஜன் நேற்று இரவு உயிரிழந்தார். அவரது உடலுக்க பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி  சசிக்கலா. இவர் தற்போது முறைகேடாக சொத்து குவித்த வழக்கில் சிறையில் இருந்து வருகிறார். இவரது  கணவர் நடராஜனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்  கல்லீரல், சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றது. பின்னர் நலமுடன் திரும்பினார். ஆனாலும் தொடர்ந்து  சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு,மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி, செவ்வாய்க்கிழமை (20.3.18 ) அதிகாலையில் அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 75. இவர் புதிய பார்வை இதழின் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், கி.வீரமணி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி உள்ளனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்துக்கு நடராஜன் உடல் எடுத்துச் செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெறும் என்று தெரிவக்கப்பட்டுள்ளது.

நடராஜனின் மறைவிற்கு விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன்,  மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா,  தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ம.நடராஜன் உடலுக்கு, கி.வீரமணி, ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி, எ.வ.வேலு, கராத்தே தியாகராஜன், நாஞ்சில் சம்பத், ராஜமாணிக்கம், வைரமுத்து, பாரதிராஜா, கலைப்புலி தாணு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

Leave A Reply

%d bloggers like this: