பியாங்சாங்:
12-வது குளிர்கால பாராலிம்பிக் போட்டிகள் தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் 9-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நடைபெற்றது.இந்தத் தொடரில் 49 நாடுகளைச் சேர்ந்த வீரர்- வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.வடகொரியா,ஜார்ஜியா,தஜிகிஸ்தான் ஆகிய 3 நாடுகள் குளிர்கால பாராலிம்பிக் தொடரில் முதன்முறையாகப் பங்கேற்றன.ஊக்கமருந்து பிரச்சனை காரணமாக ரஷ்ய வீரர்கள் ஒலிம்பிக் கமிட்டியின் கீழ் தனிப்பட்ட போட்டியாளர்களாக என்.பி.ஏ அணியில் களமிறங்கினர்.குளிர்கால பாராலிம்பிக் தொடரில் ஐஸ் ஸ்லெட்ஜ் ஹாக்கி, பனிச்சறுக்கு உள்பட 6 வகையான விளையாட்டு போட்டிகளில் ஆண்-பெண் என இருபாலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

கடந்த பத்து தினங்களாக நடைபெற்று வந்த இந்த தொடரில் அமெரிக்க அணி 13 தங்கம், 15 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 36 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்து அசத்தியது.ஒலிம்பிக் கமிட்டியின் கீழ் தனிப்பட்ட வீரர்களாகக் களமிறங்கிய (என்.பி.ஏ அணி) 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என 24 பதக்கங்கள் வென்று இரண்டாவது இடம் பிடித்தது.

நாடுகள்             தங்கம்            வெள்ளி              வெண்கலம்             மொத்தம்
அமெரிக்கா          13                        15                                8                            36
என்.பி.ஏ                  8                        10                                6                            24
கனடா                     8                          4                               16                           28
பிரான்ஸ்               7                           8                                5                            20
ஜெர்மனி               7                            8                               4                            19

போட்டியை நடத்திய தென்கொரியா 1 தங்கம்,2 வெண்கலம் என மூன்று பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் நியூசிலாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுடன் இணைந்து 16-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.