கேரளாவில் உள்ள கம்யூனிஸ்டுகள் போல மதவெறி ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு எதிராக உயிர்தியாகம் செய்தவர்கள் இந்தியாவில் எங்கும் இல்லை.

அங்கு ஒரு மாபெரும் கலவர திட்டத்தோடு இந்த யாத்திரை திட்டமிடப்பட்டது. அரசு தடை செய்யும் அதைவைத்து அரசியல் லாபம் அடையலாம் என நினைத்தது. ஆனால் கேரள அரசு தடைவிதிக்கவில்லை. கேரள மக்களும் அந்த யாத்திரையை நிராகரித்தார்கள். கர்நாடக அரசும் அதையே செய்தது.

இரண்டு மாநிலத்தில் ஏமாந்த சங்கீகள், தமிழக அரசின் துணையுடன், 144 தடையுத்தரவு விதித்து, கலவரத்தை உருவாக்க முயற்சி செய்கிறது.

அதன் தொடர்சியாக இன்று புதுகையில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும், இவ்வாறு ஒரு சம்பவம் நடக்கிறது எனில் இதில் வேறு ஒரு சதியிருக்கிறது என பொருள்.

நாம் அனைவரும் எச்சரிக்கையாக அணுக வேண்டிய தருணம் இது.
– பிரதாபன் ஜெயராமன்

Leave A Reply