கொழும்பு:
இலங்கை நாட்டின் 70-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா, இலங்கை,வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்ற முத்தரப்பு டி-20 தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணியும்,வங்கதேசமும் மோதியது.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் இறுதிக் கட்ட சிக்ஸரால் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.கடைசி பந்தில் சிக்சர் அடித்தது குறித்து தினேஷ் கார்த்திக் கூறியதாவது: “கடைசி பந்தில் சிக்சர் அடித்ததை மிகவும் அற்புதமாக உணர்கிறேன்.இந்த ஆட்டம் என் வாழ்நாள் முழுவதும் நினைவலைகளில் இருக்கும்.இக்கட்டான நேரங்களில் நிதானமாகக் கையாள தோனியின் ஆட்டங்கள் சிறந்த உதாரணம்.தோனி எவ்வளவு நிதானத்துடன் கையாள்வார் என்பதை நாம் பல போட்டிகளில் பார்த்து இருக்கிறோம்.திறமைகளை விலைக்கு வாங்க முடியாது.அனுபவத்தின் காரணமாகவே கற்றுக் கொள்ள முடியும்.கடைசி பந்தில் சிக்சர் அடித்ததைப் போன்று வெற்றிகரமாக ஆட்டத்தை முடிக்கும் திறமை அனுபவத்தின் பலனாக கிடைப்பது என்று நினைக்கிறேன்.இதற்கு தோனி போன்றவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள முடியும்” என கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.