கோவை, மார்ச் 19-
கோவை போலுவம்பட்டி வனச்சரகத்தில் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது.

கோவை வனக்கோட்டம், போலுவம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட வெள்ளப்பதியில் திங்களன்று களப்பணியாளர்கள் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொட்டப்பதி என்கிற இடத்தில் யானைகுட்டி ஒன்று இறந்து கிடந்ததுகண்டறியப்பட்டது. இதனையடுத்து வன கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பரிசோதனை மேற்கொண்டனர். இதில் குட்டி ஆண் யானை பிறக்கும்போதே இறந்துள்ளது என தெரியவந்தது. இதனையடுத்து இறந்த யானையை பிரேத பரிசோதனை செய்து சடலத்தை அங்கேயே விட்டு சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: