மேக கணினி தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதால் சிறு குறுந்தொழில்கள் நிர்வாக செலவுகளை மிச்சப்படுத்ததுமுடியும் என்று மைக்ரோசாஃப்ட் இந்தியா சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேக கணினி தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதால் பொருளாதார மற்றும் சமூகத்தில் விளைவுகள் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை கணக்கிடுவதற்காக மைக்ரோசாஃப்ட் மற்றும் தாட் ஆர்பிட்ரேஜ் என்ற ஒரு ஆய்வு நிலையமும் 11 நகரங்களில் 275 சிறுமற்றும் குறுதொழில் நிறுவனங்களில் (எஸ்எம்இ) ஆய்வு நடத்தின. இந்த ஆய்வில் சிறு குறுந்தொழில்கள் பிரிவில் உள்ள நிறுவனங்கள் மேக கணினி தொழில் நுட்பத்தை மிகவும் பயன்படுத்தியதால் அவற்றின் வர்த்தக வாய்ப்புகள் அதிகரித்ததோடு லாபமும் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

அதிகளவில் மேக கணினி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதின் விளைவாக சந்தையில் வாய்ப்பு அதிகரித்துள்ளதோடு பணியாளர், உற்பத்தித்திறன் மற்றும் செயல்பாட்டு முறைகளில் பெரிய அளவில் மாற்றங்களை காணமுடிவதாக அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: