கடமலைக்குண்டு:
தேனி மாவட்டம் கடமலை – மயிலை ஒன்றியம் கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவி உள்ளது. இது, மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று. வருடத்தின் பெரும்பாலான மாதங்கள் இந்த அருவியில் நீர்வரத்து காணப் படும். மதுரை, திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். மேலும் இந்த அருவி மூலம் கோம்பைத்தொழு, கும ணன்தொழு, பொன்னன்படுகை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநி யோகிக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுக்கு முன்பு அருவி பகுதியில் சுற்றுலா பய ணிகள் வசதிக்காக பெண்கள் உடை மாற்றும் அறை, தடுப்பு கம்பிகள், சிமெண்டு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள்
ஏற்படுத்தப்பட்டன. இதன்பின் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்க தொடங்கி யது.
தற்போது கடந்த சில ஆண்டு களாக அருவி பகுதியில் போதிய பராமரிப்பு பணிகள் இல்லாத தால் தடுப்பு கம்பிகள் உள்ளிட்டவை சேதமடைந்து உள்ளன. அருவிக்கு செல்லும் சாலை குண்டும்,குழியுமாக மிகவும் பழுதடைந்து உள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாததால் பெண்கள், வயதானவர்கள் அருவிக்கு செல்ல மிகுந்த சிரமப்படு கின்றனர்.

இதனால் சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதுகுறித்த கோரிக்கைகளில் இதுவரை மாவட்ட நிர்வாகத்தின் எந்தவித நடவடிக்கையும் இல்லை. அதிகாரிகளின் தொடர்அலட்சியப் போக்கால் மேகமலை அருவி தற்போது சிறப்பை இழந்து வருகிறது.எனவே, மேகமலை அருவி சுற்றுலா தலத்தை புதுப்பொலி வுடன் மீட்டெடுக்க உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வா கம் எடுக்க வேண்டும் என முன்னாள் கவுன்சிலர் பெருமாள் மற்றும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.