தமிழ்நாடு அரசு கேபிள் டிவியில் செட்டாப் பாக்ஸ் கோளாறு ஏற்பட்டு பழுது பார்த்து தந்தாலும் இயங்கவில்லை என கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தெரிவிக்கின்றனர்.

கேபிள் டிவியில் அனாலாக் முறையில் ஒளிப்பரப்பப்பட்ட கேபிள் டிவி ஒளிப்பரப்பு, மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் முறையில் நிறைய சேனல்களை காணும் வகையில் அதற்கேற்ற கருவியான செட்டாப் பாக்சை பதிவு பெற்ற கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலமாக தமிழக அரசு வழங்கி வருகிறது. இப்படி வழங்கப்படும் செட்டாப் பாக்சில் சில பாக்சுகள் இயங்கவில்லை. மேலும் இதன் உபகரணங்களான அடாப்டர், ரிமோட் போன்றவையும் இயங்காத நிலை உள்ளது. அரசு சார்பில் பழுது நீக்கும் முகவரிடம் கொடுத்து பழுது நீக்கி கொண்டு வந்து இயக்கினாலும் செட்டாப் பாக்ஸ் இயங்கவில்லை என ஆபரேட்டர்கள் தெரிவிக்கின்றனர். பழுது நீக்கப்பட்டு பெறப்பட்ட செட்டாப் பாக்சுகளை அரசு நிறுவனம் ஆக்டிவேட் செய்யாததால் சும்மாவே வைத்திருக்கும் நிலை உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கோயம்புத்தூரிலிருந்து செயல்படும் நிறுவனத்தின் மூலமாக பழுது நீக்கப்பட்ட செட்டாப் பாக்சுகளை ஆக்டிவேட் செய்து இயக்க வேண்டும். ஆனால் அதற்கான சர்வர் தொகுப்பகம் கடந்த 2 மாதங்களாக வேலை செய்யாததால் செட்டாப் பாக்சுகளை ஆக்டிவேட் செய்ய முடியவில்லை. அதே நேரத்தில் அரசு கேபிள் அலுவலகத்தில் புதிய செட்டாப் பாக்சுகளும் இருப்பு இல்லை என்கின்றனர். புதிய பாக்சுகளும் வழங்காமல், பழுது நீக்கப்பட்ட பாக்சுகளையும் ஆக்டிவேட் செய்யாமல் உள்ளது. இது தனியார் டிடிஎச் விற்பனைக்கே உதவும் என ஆப்ரேட்டர்கள் கூறுகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: