திருப்பூர், மார்ச், 19-
வீட்டுமனை பட்டா கேட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பெரியார் நகர் பகுதி மக்கள் மனு அளித்து முறையிட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி 1 ஆவது மண்டல பகுதிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதி குடி
யிருப்போர் நல சங்கத்தின் சார்பில் அங்கு வசிக்கும் மக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:  தமிழ்நாடு அரசு வீட்டுவசதி வாரியத்தால் கடந்த 1975 ஆம் ஆண்டு பெரியார் நகர் உருவாகப்பட்டு 334 வீடுகள் கட்டி வசித்து வருகிறோம். அந்த இடத்திற்க்கான தவணைத் தொகையினை முழுமையாக தமிழ்நாடு விட்டுவசதி வாரியத்திற்கு செலுத்தி வீட்டுமனைகளுக்கான பத்திரங்களையும் பெற்றுள்ளோம். ஆனால், அந்த வீடுகளுக்கு பட்டா இன்னும் வழங்கப்படவில்லை,

இந்நிலையில் அந்த வீட்டுமனைகளுக்கான சிட்டா எடுப்பதற்காக சென்றால் அந்த இடம் அரசு புறம்போக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை வீட்டுமனை பட்டா வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. ஆகவே, எங்களுக்கு உடனடியாக பட்டா வழங்கிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இம்மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் பிரன்னா ராமசாமி, உடனடியாக பட்டா வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

Leave A Reply

%d bloggers like this: