கோவை, மார்ச் 19-
கோவையில் படிப்பக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டாண்டு கடந்தும் திறக்கப்படாததைக் கண்டித்து திங்களன்று வாலிபர் சங்கத்தினர் நூதன முறையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை செல்வபுரம் எல்ஐசி காலனி பகுதியில் ரூ.5 லட்சம் செலவில் படிப்பக கட்டிடம் மற்றும் குழந்தைகள் விளையாட்டு பூங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஆனால், கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்தும் இதுவரை திறப்பு விழா செய்யப்படவில்லை. இதுகுறித்து வாலிபர் சங்கம் சார்பில் பல முறை மனு அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், திறப்பு விழாவிற்கு தேதி குறிக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திங்களன்று புத்தகங்களை தட்டில் வைத்து சீர்வரிசையோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இம்மனுவினை வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ், பொருளாளர் சீலாராஜ், நிர்வாகிகள் நிசார்அகமது, பாலு, விஜய்சங்கர் உள்ளிட்டோர் அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: